search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேம்பால விபத்து"

    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக பேசிய ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி, மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் மேம்பாலத்தின் ஒரு பகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்துக்கு கீழே சென்ற வாகனங்கள் மற்றும் ஆட்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் இதுவரை உயிர்சேதம் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும், மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருவதாகவும் மேற்குவங்காள மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி பொதுப்பணித்துறை மற்றும் ரெயில்வே நிர்வாகம் தான் இந்த மேம்பாலத்தின் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பேற்றிருக்க வேண்டும் என்றும், மேம்பாலத்துக்கு கூடுதல் பராமரிப்பு அளித்திருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த விவகாரம் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கேஷரிநாத் திரிபாதி குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    கொல்கத்தாவில் மேஜெர்ஹர் மேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். #kolkatabridgecollapse
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மேஜெர்ஹட் என்ற மேம்பாலத்தின் ஒருபகுதி இன்று மாலை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த பின் பேசிய மந்திரி ஃபிர்ஹத் ஹக்கீம், இந்த மேம்பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போது வரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து பகுதியில் இருந்து 6 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதேவேளையில், டார்ஜிலிங்கில் இருக்கும் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காளம் திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்பு பணிகளை கண்காணித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

    இந்நிலையில், இந்த மேம்பால விபத்து குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், ‘கொல்கத்தாவில் உள்ள மேம்பாலம் இடிந்து விழுந்தது மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் இறைவனை வேண்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #kolkatabridgecollapse
    உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் கட்டுமான பணியில் இருந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்த விபத்து குறித்து ராஜன் மிட்டால் உட்பட 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், கடந்த வாரம் இந்த பாலத்தின் ஒரு பகுதி பயங்கரமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பாலத்தின் கீழ் பகுதியில் நின்றிருந்த பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன.

    இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விபத்து குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் குழு தங்கள் அறிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர்.

    அந்த அறிக்கையின் அடிப்படையில் 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக உ.பி மேம்பால கட்டுமான நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜன் மிட்டால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    தற்போது ராஜன் மிட்டால், முதன்மை திட்ட மேலாளர் தெவாரி, திட்ட மேலாளர் சுதன், துணை பொறியாளர் ராஜேஷ் சிங், பொறியாளர் லால் சந்த், முன்னாள் திட்ட மேலாளர் ஜெண்டா லால் மற்றும் கூடுதல் திட்ட மேலாளர் ராஜேஷ் பால் ஆகிய 7 பேர் மீது நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


    மேலும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்ச ரூபாயும் நிதி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Varanasiflyovercollapse #YogiAdityanath
    ×